இந்த நோய் பரவினால் 10 நாடுகள் பாதிப்படையும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
341Shares
341Shares
lankasrimarket.com

மடகாஸ்கர் மக்களை ஆட்டிப்படைக்கும் தொற்று நோய் 10 நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கர் மக்கள் மிகவும் தொற்றுநோயினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் ஊசி போட வேண்டும் என்று கூறி மருத்துவமனைக்கும் செல்வதில்லை.

அப்படி ஒரு பிரச்சனை வந்தாலும் ஊசிக்கு பயந்து, மருத்துவமனை பக்கம் வருவதில்லை, இது போன்று நாட்டின் தலைநகரான Ambohimindra-வில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பிளேக் நோயின் காரணமாக நோயாளி மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆனால் அந்த நோயாளியோ ஊசி மற்றும் சிகிச்சை முறைகளுக்கு பயந்து மருத்துவமனையை விட்டு ஓடியதாகவும், அதன் பின் காவலாளிகள் அவரை பிடித்தைத் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை மேற்கொண்டபோது, அந்த நோயாளி ஆம்புலன்சில் இருந்து தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து யுனிசெப் Jean Benoit Manhes கூறுகையில், இங்கிருக்கும் மக்கள் மருத்துவமனையையே உபயோகிக்க அஞ்சுகின்றனர்.

பிளேக் நோய் பிரச்சனை இங்கு தலை விரித்து ஆடுகிறது, ஆனால் மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை, இந்த நோயின் தாக்கம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 4, 907 இறந்துள்ளதாகவும், 12,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் இரண்டு மூன்று பேர் நரம்பு தொற்று நோய், விடாது இருமல் போன்ற நோய்களினால் 24 மணி நேரத்திற்குள் இறந்துள்ளதாகவும், இவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைய்யும் இந்த நோய் தாக்குவதால் மருத்துவர்களும் அஞ்சுகின்றனர், மிகவும் அழுத்தம் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த நோய் தென் ஆப்பிரிக்கா, Seychelles, கென்யா, எத்தியோப்பியா, தன்சானியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற 10 நாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்