400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: அதிர வைக்கும் கொடூரம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறும் அகதிகள், லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டு 400 டொலருக்கு விற்கப்படும் கொடுமை நடந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள், தினந்தோறும் ஐரோப்பாவிற்கு அகதிகளாக பயணம் மேற்கொள்கின்றனர்.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, அங்கு அதிகார போர் உச்சகட்டத்தினை அடைந்துள்ளது.

லிபியாவிலும் வறுமையால் வாடும் மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக செல்கின்றனர்.

மேலும், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் வெளியேறும் மக்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகின்றனர்.

ஆனால், லிபியாவில் இருக்கும் கொள்ளையர்கள், அகதிகளாக செல்லும் மக்களை சிறை பிடிப்பதுடன், அவர்களை அடிமைகளாகவும் விற்கின்றனர்.

ஒவ்வொருவரும் 400 முதல் 600 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதை பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

இவ்விடயம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...