தென்கொரியாவிற்காக சண்டையிடவுள்ள வடகொரியர்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
438Shares
438Shares
ibctamil.com

வடகொரியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை தவிர்த்து மற்ற அனைவருக்கும் தென்கொரியாவில் ராணுவ சேவை என்பது கட்டாயப் பணியாகும்.

இந்நிலையில் வடகொரியாவில் பிறந்து தற்போது தென் கொரியாவில் வசிக்கும் கிம்முக்கு ராணுவ சேவை என்பது கட்டாயமில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட முடிவுசெய்துள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு பதினாறு வயதிருக்கும்போது நான் வட கொரியாவிலிருந்து வெளியேறினேன்.

கால்பந்தை தொழில்ரீதியாக விளையாட வேண்டுமென்பதால் நான் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

என் தந்தையை போன்று எனக்கும் கால்பந்து தான் எல்லாமுமாக இருந்தது, நான் வெளியேறுவதாக கூறினால் என்னைத் தடுத்துவிடுவார் என்பதால் வெளியேறுவதை தந்தையிடம் கூறவில்லை.

கால்பந்து காரணமாக என்னால் தென்கொரியாவிலேயே இருக்க முடிந்தது, இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது முழங்காலில் காயமேற்பட்டது.

கால்பந்தை தொழில்ரீதியாக விளையாடுவதை விட்டுவிட வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினர்.

அதனால்தான் எனது ஆசிரியர் என்னை தென்கொரிய ராணுவத்தில் கீழ்நிலை அதிகாரியாக சேருமாறு பரிந்துரைத்தார்.

வடகொரியாவிலிருந்து வந்தவர்களுக்கு தெற்கின் கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு உண்டு.

இது பெரும்பான்மையான தென்கொரிய ஆண்கள் தவிர்க்க நினைக்கும் பணியாகும், ஆனால் நான் அப்படி இல்லை.

நாட்டிற்கு சேவை செய்து தென்கொரியாவின் பெருமைமிகு மற்றும் பொறுப்புள்ள உறுப்பினராக நினைக்கும் யோசனை எனக்கு பிடித்திருந்தது.

தென் மற்றும் வடகொரியாவுக்கிடையே மோதல் ஏற்படும்போது எனது தந்தை தாய்நாடு என்றழைக்கும், எனது முன்னாள் தாயகத்தை தாக்க முடியுமா?

ஒரு போர் மூள்வது பற்றி யோசிக்காமல் இருப்பதற்கு நான் முயற்சிக்கிறேன். ஆனால் அந்நிலை ஏற்பட்டால் என்னால் முடியுமென்று நினைக்கின்றேன், நான் அதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இவர் அடுத்தாண்டு தன்னுடைய பயிற்சியை நிறைவு செய்தால் வடகொரியாவில் இருந்து வெளியேறி தென் கொரிய ராணுவத்தில் கீழ்நிலை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ள ஒருசிலரில் ஒருவராவார்.

இது தனது சுய மற்றும் குடும்பபாதுகாப்பிற்கு அடையாளம் காணப்பட விரும்பாத வட கொரியாவில் இருந்து வெளியேறிய ஒருவரின் கதையாகும்.

வீடியோவை காண

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்