பட்டினியால் தவித்த ஜிம்பாப்வே மக்கள்: சொகுசு வாழ்க்கை வாழ்ந்த முகாபே மனைவி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அரசியல் நெருக்கடிக்கு உள்ளான ஜிம்பாப்வே நாட்டில் 10-ல் ஏழு பேர் வறுமையில் பரிதவிக்கும்போது, நாட்டு ஜனாதிபதியின் மனைவி மில்லியன்களை கொட்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் நீண்ட 37 ஆண்டு கால முகாபே ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் தற்போதைய அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி கிரேஸ் முகாபே ஆகிய இருவரும் ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் ஹராரேவில் அமைந்துள்ள 25 படுக்கை அறை கொண்ட ஆடம்பர மாளிகையில் தற்போது இருவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 52 வயதான கிரேஸ் முகாபேயின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகத் துவங்கியுள்ளது.

’குஸ்ஸி கிரேஸ்’ என பட்டப்பெயரில் அறியப்படும் கிரேஸ் முகாபே ஒரு ஆடம்பர பிரியை. உலகின் பல்வேறு நாடுகளில் சொத்து சேர்ந்துள்ள கிரேஸ் முகாபே, தனது மகளின் திருமணத்திற்காக மட்டும் 3 மில்லியன் பவுண்ஸ் செலவிட்டுள்ளார்.

மட்டுமின்றி புதுவகை ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்குவதற்காக சுமார் 300,000 பவுண்ஸ் தொகையை செலுத்தியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சென்றிருந்த கிரேஸ் முகாபே அங்கு ஒரே ஒரு நாள் மட்டும் சுமார் £120,000 தொகைக்கு ஷாப்பிங் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரேஸ் மற்றும் முகாபே தம்பதிகளின் திருமணமானது இந்த நூற்றாண்டின் மிக ஆடம்பரமான திருமணம் என ஊடகங்கள் விமர்சிக்கும் அளவுக்கு நடைபெற்றது.

மட்டுமின்றி முகாபேயின் 90-வது பிறந்த நாள் விழா செலவு மட்டும் சுமார் 600,000 பவுண்ஸ் செலவில் நடந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மட்டும் கிரேஸ் முகாபே 12 வைர மோதிரங்கள், 62 ஜோடி Ferragamo ஷூ, 33 குஸ்ஸி ஷூ மற்றும் 80,000 பவுண்ஸ் விலையில் பிரத்யேகமான ரோலக்ஸ் கைகடிகாரம் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

தங்களது 20-வது திருமண ஆண்டு விழாவுக்காக £900,000 தொகையில் வைர மோதிரம் ஒன்றை வாங்கியுள்ளார்.

முகாபேயின் ஒரே ஒரு மகளான போனாவின் திருமணத்திற்கு 4000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழாவினை 3 மில்லியன் பவுண்ஸ் செலவில் ஆடம்பரமாக நடத்தியுள்ளார் முகாபே.

முகாபே குடும்பத்தின் ஆடம்பரம் இவ்வாறு இருக்க சராசரி ஜிம்பாப்வே குடிமக்களில் 10-ல் 7 பேர் வறுமையால் தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...