19 இளம்பெண்களை தலையை துண்டித்து கொலை செய்த கொடூரன்: அதிர வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சைபீரியாவில் 19 பெண்களை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த ரஷ்யாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ரஷ்யாவின் முன்னாள் பொலிஸ் அதிகாரியான Evgeny Chuplinsky(52) தன் மீது சுமத்தப்பட்டுள்ள 19 கொலை குற்றம் தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு எதிர்கொள்ள உள்ளார்.

முன்னாள் ரஷ்ய பொலிஸ் அதிகாரியான Chuplinsky சைபீரியாவின் Novosibirsk பகுதியில் மட்டும் குறித்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளார்.

கொலைக்கென் ராணுவ கத்தியை பயன்படுத்தியுள்ள Chuplinsky பெண்களை மட்டுமே குறிவைத்துள்ளார். தம்மிடம் சிக்கும் பெண்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் மார்பகங்களை துண்டித்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் தலைகளை துண்டித்து உடல்களை புதருக்குள் மறைவு செய்து வந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் அளித்த Chuplinsky, பாலியல் தொழிலாளர்களை மட்டுமே தாம் கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் இந்த சமூகத்தின் சாபம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1998 முதல் 2000 வரையான காலகட்டத்தில் மொத்தம் 19 பெண்களை Chuplinsky கொடூரமாக கொலை செய்துள்ளார். மட்டுமின்றி சிலரது உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளார்.

தம்மீது விசாரணை அதிகாரிகளின் பார்வை திரும்பாமல் இருக்க, கொலை செய்யப்பட்ட உடல்களின் மர்மமான கோடுகளை கத்தியால் வரைந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் இதுவரை 5,000 பொதுமக்களை விசாரித்துள்ளனர். 8,000 சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் 300 தடையவியல் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

Chuplinsky பல் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து, குறித்த தம்பதிகளுக்கு இளம் வயதில் 2 பெண் மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்