18 பேர் கொல்லப்பட்ட விபத்தில் சிரித்தபடி செல்பி! குவியும் கண்டனங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் நேற்று பனிமூட்டத்தால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்து நடந்த பகுதியில் சிரித்தபடி செல்பி எடுத்த பத்திரிகையாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோர விபத்து நடந்த பகுதியில் சிரித்தபடி புகைப்படத்துக்கு முகம் காட்டிய பத்திரிகையாளரை தொடர்புடைய நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

சீனாவின் பிரபல நிறுவனத்தின் பத்திரிகையாளரான Ling Ziying அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருடன் இந்த புகைப்படத்துக்கு முகம் காட்டியுள்ளார்.

குறித்த விபத்தில் 30-கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியுள்ளது. மட்டுமின்றி சில வாகனங்கள் தீபற்றி எரிந்துள்ளது.

இந்த விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்தனர்.

பத்திரிகையாளரின் புகைப்படம் வைரலானதை அடுத்து அவர் குறித்த புகைப்படத்தை நீக்கியுள்ளார். மட்டுமின்றி மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...