பெருவெள்ளத்தால் பேரழிவை சந்தித்த கிரீஸ்: உடைமைகள், வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்த சோகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கிரீஸ் நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தேசிய துக்க தினம் அனுசரிக்கும்படி அந்த நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரின் மேற்குப் பகுதியில் மலை அடிவார தொழில் நகரங்களான நியா பெராமோஸ் மற்றும் மந்தரா ஆகிய நகரங்களை இரவோடு இரவாக திடீரென பெருவெள்ளம் சூழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பலர் முதியோர் என்றும், குடியிருப்புகளில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலைப் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வந்த வெள்ளத்தால் ஏராளமான குடியிருப்புகள் நீரில் மூழ்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி லொறி, கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவிலிய காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்று இது இருந்ததாகவும், கட்டுக்கடங்காத வேகத்தில் நகர வீதிகளை சூழ்ந்துள்ளதாகவும் தப்பித்துக் கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முக்கிய சாலைகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நகர கட்டமைப்புகளை திறம்பட திட்டமிடாததே உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers