புலியிடம் இருந்து தப்பித்தது எப்படி? மிருககாட்சி சாலையில் தப்பிய பெண்ணின் திக் திக் நிமிடங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மிருககாட்சி சாலையில் காப்பாளரான பெண் ஒருவர் புலியிடம் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்த திக் திக் நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.

ரஷ்யாவின் Kaliningrad மிருககாட்சிசாலையில் உள்ள சைபீரியன் என்ற புலிக்கு Nadezhda Srivastava(44) என்ற பெண் காப்பாளார் கடந்த 5-ஆம் திகதி உணவு வழங்கிய போது, திடீரென்று புலி அவர் மீது பாய்ந்தது.

இதைக் கண்ட பார்வையாளர்கள் தங்கள் அருகில் இருந்த பொருட்களை வீசி, பெண் காப்பாளரை காப்பாற்றினர்.

புலியிடம் சிக்கிய இந்த திக் திக் நிமிடங்கள் குறித்து Nadezhda Srivastava பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், புலிக்கு சில மீற்றர் தூரம் நின்று தான் உணவு அளித்துக் கொண்டிருந்தேன், அப்போது திடீரென்று என் மீது அவன் பாய்ந்துவிட்டான், இதை நான் எதிர்பார்க்கவில்லை.

என் மீது பாய்ந்தவுடன் என் முகத்தில் மரண பயம் வந்துவிட்டது, இருப்பினும் சைபீரியனிடம் பேச முயற்சித்து அந்த புறம் போ, போ என்று கூறினேன்.

அதன் பின் அவன் என்னை நன்றாக கீழே அழுத்தினான், அப்போது நம்மிடம் இவன் விளையாடுகிறானா என்று நினைத்தேன்.

ஏனெனில் பொதுவாக புலிகள் பாய்ந்தவுடன் முதலில் தொண்டை பகுதியை தான் கடிக்கும், ஆனால் இவனோ என் கை மற்றும் முழங்கால் மீது தான் பல்லை வைத்தான், கழுத்து மற்றும் என் தலையை தொடவே இல்லை.

இப்படி செய்து கொண்டிருந்தே அவன், சிறிது சோர்வான மாதிரி தெரிந்தது. இதனால் தள்ளிவிட்டு விட்டு சென்றுவிடலாம் என்று முயற்சித்த போது, அவன் என்னை நன்றாக காலை வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டான்.

இப்படி 10 நிமிடங்கள் அவனிடம் போராடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த பார்வையாளர்கள் உடனடியாக தாங்கள் வைத்திருந்த பொருட்களை வீசி அவனை குழப்பமடைய செய்தனர்.

இதனால் குழம்பிய அவன் தன்னை விட்டு விட்டு சென்றான். தன்னை காப்பாற்றிய பார்வையாளர்களுக்கு நன்றியை தவிர வேறு எதுவும் கூற முடியவில்லை என்று கூறினார்.

புலி தாக்கியதில் அவரது கைகளில் மட்டும் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றபடி அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nadezhda Srivastava-க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...