540 பேரை பலிகொண்ட நிலநடுக்கம்: இஸ்ரேல் உதவியை நிராகரித்த ஈரான்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ஈரான்- ஈராக் எல்லையில் கடந்த 12ம் திகதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 8100 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு மருத்துவ உதவி அளிக்க இஸ்ரேல் முன்வந்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ கூறுகையில், ஈரான்- ஈராக் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்கள் நெஞ்சை உருக்குகின்றன, மருத்துவ உதவிகள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

ஆனால் இந்த உதவியை ஈரான் மறுத்துவிட்டதாக இஸ்ரேல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கடந்த 2003ம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்ரேல் உதவ முன்வந்த போது ஈரான் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers