முகாபே மனைவியின் அதிர வைக்கும் பின்னணி: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு ராணுவத்தால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது 52 வயதாகும் க்ரேஸ் முகாபே ஜிம்பாப்வே அரசின் ஆட்சி அதிகாரத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் செல்வாக்கு மிக்க பெண்மணியாக இருந்து வந்தார்.

ஆளும் Zanu-PF கட்சியின் மகளிர் அணி தலைவியாகவும் இளைஞர் அணியின் முக்கிய தலைவராகவும் இருந்து வந்தார்.

கட்சியில் செல்வாக்கு மிக்க பல தலைவர்களை வெளியேற்றியதும், க்ரேஸ் முகாபேயின் சூட்சிகள் என்றே கருதப்படுகிறது.

மட்டுமின்றி நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடிவு செய்ஹ்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

க்ரேஸ் முகாபேயின் முதல் கணவர் Stanley Goreraza விமானப்படை பைலட்டாக பணிபுரிந்து வந்தார். க்ரேஸ் அப்போது ஜனாதிபதியின் செயலராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முகாபேவுக்கும் க்ரேசுக்கும் இடையே உறவு மலர்ந்தது. அச்சமயத்தில் முகாபேயின் மனைவி சாலி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார்.

க்ரேஸ் மற்றும் ஜனாதிபதி முகாபே தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. தற்போது ராணுவத்தின் பிடியில் உள்ள முகாபே பதவியை துறக்க ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு பதிலாக க்ரேஸ் முகாபேவை பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேற ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து க்ரேஸ் முகாபே தற்போது நமீபியாவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers