இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்! பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்! பட்டியல் வெளியானது

உலகின் பல்வேறு நாடுகள் போர் மற்றும் கொடும் வியாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டிய நாடுகள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியலில் மத்திய கிழக்கு நாடுகள், வடகொரியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளை தொடர் ஏவுகணை சோதனைகளால் அச்சுறுத்தி வரும் வடகொரியா குறித்த பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், பிரித்தானியா மற்றும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் இன்னமும் சென்று வருவதாக கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் எழும் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் லிபியா அமைந்துள்ளது.

இதன் அடுத்த இடத்தில் உள்நாட்டுப் போரால் சிதைந்து போயுள்ள சிரியா உள்ளது.

அடுத்த இடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஈராக் உள்ளது.

4-வது இடத்தில் தாலிபான் ஆதிக்கத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் பகுதிகள். 5-வது இடத்தில் வடகொரியா, 6-வது இடத்தில் சீனாவின் கிழக்கு பகுதி, 7-வது இடத்தில் பொருளாதார நெருக்கடியால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் வெனிசுலா மற்றும் 8-வது இடத்தில் அரசியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் ஜிம்பாப்வே.

முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நாடுகளின் பட்டியல்:

மெக்சிகோ, நைஜீரியா, உக்ரைன், லெபனான், இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லை, எகிப்து, ஏமன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்