கிறிஸ்துமஸ் தினத்தில் பாரிய தாக்குதல்: ஐ.எஸ் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
268Shares
268Shares
lankasrimarket.com

கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வத்திக்கானில் பாரிய தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல் வாகனங்களை பயன்படுத்தி நடத்தப்படும் என ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவு குழு ஒன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

"Christmas blood" என குறிப்பிட்டு வத்திக்கானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாகனத்தில் துப்பாக்கி மற்றும் தோள்பை ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இயக்கம் இந்த ஆண்டில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட பல்வெறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது மட்டுமின்றி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் குழு உறுப்பினர்கள் எனவும் கூறி வருகிறது.

சமீப காலமாக வத்திக்கான் மீதும் Pope Francis மீதும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக உருவாக்கப்பட்ட சந்தை ஒன்றில் லொறியை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்