அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: நிர்வாணமாக போராடிய இளம்பெண்கள்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
131Shares
131Shares
ibctamil.com

பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் தற்போதைய சட்டப்படி, சில விதிவிலக்குகளின் அடிப்படையில் கற்பழிக்கப்பட்ட மற்றும் தாயாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அப்பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.

ஆனால், கடந்த வாரம் அரசு உயர் அதிகாரிகள் குழு ஒன்று இந்த விதிவிலக்குகளை நீக்கிவிட்டு அனைத்து விதமான கருக்கலைப்புகளுக்கும் தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம், கர்ப்பமான தாயாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், கற்பழிப்பிற்கு உள்ளான பெண்களும் கருக்கலைப்பு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இப்புதிய சட்டத்திற்கு அந்நாட்டு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

பிரேசிலில் உள்ள Rio de Janeiro நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

சில பெண்கள் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தை கலைக்க குழுமிய பொலிசார் பெண்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

எனினும், இப்புதிய சட்டத்தை அரசு கைவிடாவிட்டால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என பெண்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்