டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பாடல் பாடிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி: காரணம் இது தான்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
126Shares
126Shares
lankasrimarket.com

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பாடல் பாடி அசத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டில் நடைபெற்ற ஆசியா-பசுபிக் பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

டிரம்ப்பை உற்சாகமாக வரவேற்ற பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோட்ரிகோ நேற்று இரவு தனது நாட்டு பாரம்பரிய உணவுகளை அளித்து சிறப்பித்துள்ளார்.

விருந்து நிகழ்ச்சியின்போது, கூட்டத்தினர் மத்தியில் திடீரென ரோட்ரிகோ எழுந்து ஒலிபெருக்கி முன்னிலையில் நின்றுள்ளார்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ரோட்கோ பாடல் ஒன்றை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

‘அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி தான் பாடலை பாடினேன்’ என ரோட்ரிகோ நகைச்சுவையாக கூறியதை தொடர்ந்து அனைவரும் அவரை கை தட்டி பாராட்டியுள்ளனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்