ஈராக்கை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 130 பேர் உயிரிழப்பு, 1,000 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
664Shares
664Shares
ibctamil.com

ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சுலைமானியா நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் இணைப்பு:

7.3 ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 130 பேர் உயிரிழந்துள்ளனர், 1,000 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்துவருவதாகவும், தற்போதைக்கு குடிமக்கள் யாரும் கட்டிடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.

முதலாம் இணைப்பு:

ஈராக்கின் சுலைமானியா நகரின் தென்கிழக்கு பகுதியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் 61 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.3 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இஸ்ரேல், துருக்கி மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணிக்கு தாக்கியுள்ள இந்த நிலநடுக்கத்தால் 7 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டுள்ளது என்றும்

சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஈராக் மற்றும் ஈரான் நாட்டு எல்லையானது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகும். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஒன்றில் சுமார் 25,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்