அமெரிக்காவில் ரஷ்யா ஊடகத்தின் மீது தாக்குதல்: புடின் சொன்ன வார்த்தை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் ரஷ்ய ஊடகத்தின் மீதான தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் RTஎனும் சேட்டிலைட் தொலைக்காட்சி ரஷ்ய முதலீட்டோடு இயங்கி வருகிறது.

இதை வெளிநாட்டு முகவர் எனும் பெயரில் பதிவு செய்யுமாறு அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இது பாரபட்சமான நடவடிக்கை என அந்த தொலைக்காட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறுகையில், தங்கள் நாட்டு ஊடகத்தின் மீதான சட்ட ரீதியான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இது பத்திரிக்கை உரிமை, கருத்துரிமையை நசுக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...