ஒரு அபார்ட்மெண்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த கொடூரன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் தனது அப்பார்ட் மெண்டில் ஒன்பது பேரை கொலை செய்து, அவர்களை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாப்பானனின் டோக்கியாவைச் சேர்ந்த அய்க்கோ தமுரா(23) என்ற பெண் சமீபத்தில் காணாமல் போயுள்ளார்.

இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அய்க்கோ தமுரா-வின் டுவிட்டர் பக்கத்தை சோதனை செய்துள்ளனர்.

அதில் தமுரா நான் யாருடனாவது தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

இதைக் கண்ட இளைஞர் ஒருவர் வா தற்கொலை செய்து கொள்ளலாம், நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளான்.

இதையடுத்து பொலிசார் குறித்த நபர் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அவனின் பெயர் சிரைஷி (27) என்பதை அறிந்து கொண்டனர். அதன் பின் பொலிசார் அவனை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவனது வீட்டில் பொலிசார் சோதனையின் ஈடுபட்ட போது, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் வெட்டப்பட்ட கை, கால்கள் மற்றும் தலை உள்ளிட்ட மனித உடல் பாகங்கள் இருந்துள்ளன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், மீண்டும் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பணத்துக்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த கொலைகளில் ஈடுபட்டதாக கூறியுள்ளான்.

பொலிசார் கண்டுபிடிக்கபப்ட்ட உடல் பாகங்களை டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பி வைத்த போது, அந்த உடல் பாகங்கள் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு உரியது என்பது தெரியவந்தது.

இவர்களில் மூன்று பள்ளி மாணவிகள் மற்றும் பெண்ணின் காதலன் ஒருவனும் அடங்குவார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்