அதிரடி முடிவெடுத்த வெனிஸ் நகரம்: சுற்றுலா பயணிகளுக்கு சிக்கல்?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியின் வெனிஸ் நகர கட்டுமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ராட்சத கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நகர நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வெனிஸ் நகரம் அதன் புகழுக்கு ஏற்றவகையில் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள், ஆண்டுக்கு 1.4 மில்லியன் பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஆனால் இங்குள்ள குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் புகாரின் அடிப்படையில் நகர நிர்வாகம் அதிரடி முடிவென்றை எடுத்துள்ளது.

அதன்படி இனிமுதல் குறிப்பிட்ட பகுதிகளில் ராட்சத கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

இது இனிவரும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் எனவும், சுற்றுலா கப்பல்களை அருகாமையில் உள்ள தொழில்துறை துறைமுகத்தில் திருப்பி விடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய சின்னங்களுக்கு அச்சுறுத்தல் எழ நேரிடுவதால் மட்டுமே குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் நகர நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த தடை உத்தரவுக்கு வெனிஸ் நகரத்தின் 99 சதவிகித மக்களும் ஆதரவளித்து வாக்களித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்