காதலியை அடித்துக் கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரன்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இளைஞன் ஒருவன் தனது 45 வயது காதலியை அடித்துக் கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான டிமிட்ரி லுச்சின் தமது 45 வயது ஓல்கா என்ற காதலியை அவரது குடியிருப்பில் வைத்து காலி மது போத்தலை பயன்படுத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் உள்ளூர் நேரப்படி மாலை வேளையில் சந்தித்துள்ளனர். இருவரும் மது அருந்தியபடி பல சம்பவங்கள் குறித்து விவாதித்தபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தமக்கு தூக்கம் வருவதாக கூறி படுக்கை அறைக்கு ஓல்கா சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கடந்த நிலையில் லுச்சின் அவரது படுக்கை அறைக்கு சென்று தலையணையால் ஓல்காவை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் இருந்து தப்பிய அவர் லுச்சினை கடுமையாக கடிந்து கொண்டுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் காலி மது போத்தலை பயன்படுத்தி கடுமையாக தாக்கி கொலை ஓல்காவை கொலை செய்துள்ளார் லுச்சின்.

இதனையடுத்து ஓல்காவின் மூளையை சமைத்து சாப்பிட்டுள்ளார். மட்டுமின்றி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்த பெண்ணுடன் லுச்சின் பாலியல் உறவும் கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து 6 மணி நேரத்திற்கு பின்னர் ஓல்காவின் டேபெட் கணணி மற்றும் 150 ரூபில்ஸ் பணம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளார்.

இந்த நிலையில் தகவல் பொலிசாருக்கு தெரிய வரவே, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட லுச்சின், அதுவரை நடந்தவற்றை பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் லுச்சின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்