பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கும் 14 வயது சிறுவன்: 180 டிகிரிக்கு தலையை திருப்பி மிரட்டுகிறான்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
369Shares

பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தன்னுடைய தலையை 180 டிகிரிக்கு திருப்புவது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தைச் சேர்ந்தவன் Muhammad Sameer(14). இவன் தன்னுடைய கைகளை பயன்படுத்தி தலையை முற்றிலுமாக பின்பக்கம் திருப்பி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறான்.

இது குறித்து Muhammad Sameer கூறுகையில், எனக்கு ஹாலிவுட் திகில் மற்றும் பேய்படங்கள் போன்றவை மிகவும் பிடிக்கும், அது போன்ற படங்களில் தலைகளை அசாதாரணமாக எதுவேண்டும் என்றாலும் செய்வார்கள், அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதனால் தன்னுடைய 7 வயதில் இருந்து தலையை எப்படியாவது திருப்பிட வேண்டும் என்று பல மாதங்கள் பயிற்சி செய்து வந்தேன்.

இதை பார்க்கும் போது என்னுடைய தாய் அடிப்பார், ஆனால் நான் தொடர்ந்து செய்து வந்தேன். அதற்கு பலனும் கிடைத்தது.

இது கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Muhammad Sameer குறித்து அவனது தாயார் Rukhsana Khan கூறுகையில், Sameer-ன் தந்தை டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதன் பின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது வீட்டிலே இருக்கிறார்.

Muhammad Sameer உடன் பிறந்தவர் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். தந்தை வேலைக்கு போகததால், குடும்பத்தின் சுமை முழுவதும், அவன் மீதே விழுந்துள்ளது.

அவன் நடனம் நன்றாக ஆடுவான், அவன் குழுவில் எட்டு பேர் இருக்கின்றனர். இவர்கள் ஏதேனும் நிகழ்ச்சி சென்று வந்து அவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுப்பார்கள், அதே போன்று தான் என்னுடைய மகனும் தன் குடும்பத்திற்காக உழைக்கிறான்.

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை இடையில் நிறுத்திவிட்டான், அவனின் இந்த திறமையைக் கண்டு அவனுக்கு என்று ரசிகர்கள் சிலர் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

நான் என்னுடைய நடனத்தை தினந்தோறும் அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறேன், ஜிம்னாஸ்டிக் போன்றவைகளும் தெரியும், என்னுடைய திறமை நிச்சயம் ஒருநாள் வெளிஉலகிற்கு தெரியவரும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்