இறந்த சிறுவர்களுக்கு திருமண விழா எடுத்த குடும்பம்: வெளியிட்ட விசித்திர காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
197Shares

சிறுவர்கள் இருவர் ஒரே காலகட்டத்தில் இறந்ததால் அந்த குடும்பத்தினர் அவர்கள இருவருக்கும் திருமண விழா எடுத்து சிரப்பித்த சம்பவம் இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் நடந்துள்ளது.

திருமண வயதை எட்டும் முன்னரே சிறுவர்கள் இருவரும் இறந்துள்ளதால் அவர்களை திருப்திபடுத்தும் பொருட்டு குறித்த விழாவினை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரமேஷ் மற்றும் சுகன்யா ஆகிய இருவரது பொம்மைகளை உருவாக்கி திருமண விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுவாக திருமணம் முடிந்த பின்னர் புதுமண தம்பதிகள் குடும்பத்தாருடன் கோவிலை சுற்றிவருவது மரபாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த விழாவில் இறந்த சிறுவர்களின் சகோதரர் ஒருவர் குறித்த பொம்மைகளை சுமந்து சென்று கோவிலை சுற்றி வந்துள்ளார்.

இதுபோன்ற திருமணங்களை ஒரு மரபாக செய்து வரும் குறிப்பிட்ட பகுதி மக்கள், இதற்கு பேய் திருமணம் என அழைத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த சிறுவர்கள் இருவரும் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் திருமண வயது எட்டியதை அடுத்து அந்த குடும்பத்தினர் நல்ல நாள் குறித்து இந்த திருமண விழாவுக்கு எற்பாடு செய்துள்ளனர்.

திருமணத்தை எற்பாடு செய்திருந்த இரு குடும்பத்தினரும் விழா முடிவடைந்த பின்னர் பாரம்பரிய உணவு வகைகளுடன் பெரும் விருந்து ஒன்றையும் ஏற்பட்டு செய்துள்ளனர்.

இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்களும் அக்கம்பக்கத்தினர் ஏராளமானோரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்