கட்டுப்பாட்டை இழந்த லொறி பாடசாலைக்குள் புகுந்து விபத்து: அலறித்துடித்த மாணவர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
351Shares

பிரேசில் நாட்டில் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று அசுர வேகத்தில் பாடசாலைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த கோர விபத்தில் அந்த அறையில் இருந்த 60 மாணவர்களும் ஆசிரியரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாடசாலைக்குள் இருந்த கண்காணிப்பு கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அதில் லொறி புகுந்த நிலையில் மாணவர்கள் அலறும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

பிரேசிலின் Iguaba Grande பகுதியில் குறித்த விபத்து நடந்துள்ளது. சம்பவத்தின்போது அந்த பாடசாலை அறையில் 60 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் இருந்துள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று பாடசாலையின் அருகாமையில் உள்ள 2 கார்களை மோதித்தள்ளிவிட்டு அசுர வேகத்தில் பாடசாலைக்குள் புகுந்துள்ளது.

இதில் மாணவர்கள் 17 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். விபத்துக்குள்ளான லொறி ஓட்டுனருக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்