வடகொரியாவின் கனவுத்திட்டம்: பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடிய அவலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
343Shares

உலகத்தரத்தில் கட்டி முடிக்கப்பட்ட வடகொரியாவின் 150 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான விமான நிலையமானது பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது கனவுத் திட்டமாக அறிவித்து அங்குள்ள Kalma விமான நிலையத்தை உலகத்தரத்துடன் வடிவமைக்க உத்தரவிட்டிருந்தார்.

குறித்த விமான நிலையமானது கடந்த 2015 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் மிக கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை குறித்த விமான நிலையத்தில் ஒரு விமானம் கூட தரையிறங்கியதாக தகவல் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் சர்வதேச தரத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற விமான கண்காட்சியின் போது வெறும் 150 வெளிநாட்டு பயணிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

3 நாட்கள் நடைபெற்ற குறித்த கண்காட்சி காலத்தில் உள்ளூர் பயணிகள் எவரையும் அந்த விமான நிலையத்தில் கண்டதில்லை என ஜேரமன் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், குறித்த விமான நிலையத்தை சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு கட்டப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம் புதுமையாக இருப்பதாகவும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் வடகொரியாவில் சுற்றுலாவுக்கான வாய்ப்பு மிக குறைவே என அங்கு சென்று திரும்பிய பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்