மத்திய தரைக்கடலில் இறந்த நிலையில் 26 பெண்களிடன் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக இத்தாலி அதிகாரி விசாரணையை துவங்கியுள்ளனர்.
இத்தாலி அதிகாரிகள் கடந்த ஞாயிறு அன்று மத்திய தரைக்கடலில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, 22 இளம் பெண்கள் இறந்த நிலையில் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிரியா, லிபியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் அங்கிருந்து தப்பி பிழைத்து அகதிகள் வேறு நாட்டிற்கு தஞ்சம் அடைகின்றனர்.
இறந்தவர்கள் நைஜர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்களுக்கு வயது 14 முதல் 19 வரை இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல படகுகள் மூலம் பயணித்திருக்கலாம், அப்போது படகு கவிழ்ந்த விபத்தில் இவர்கள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்படுவதுடன், பாலியல் ரீதியாக இவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இருப்பினும் அவர்கள் இறந்ததற்காக காரணம் சரிவர தெரியாத காரணத்தினால், இத்தாலி அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளனர்.