180 டிகிரிக்கு சாய்வாக தொங்கும் தலை: 9 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
783Shares

பாகிஸ்தானில் 9 வயது சிறுமி ஒருவர், இயல்பான பிற பெண் குழந்தைகளைப் போன்ற கழுத்து இல்லாமல், நாள் தோறும் அவதிப்பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்சீன் என்ற சிறுமி பிறக்கும் போது, சாதரண பெண்கள் போன்று தான் பிறந்துள்ளார்.

இதையடுத்து இவர் 8-ஆம் மாததில் தன் வீட்டின் வெளியே சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் கீழே விழுந்ததால் அவளுக்கு கழுத்தில் பலமான அடி பட்டுள்ளது.

இதனால் அப்சீனின் கழுத்து தலையில் நிற்கவே இல்லை. 180 டிகிரிக்கு சாய்வாக தொங்கிப் போய் இருக்கிறது.

இது குறித்து தெரிவிக்கையில், அப்சீனுக்கு சிறுவயதில் இருக்கும் போதே தொடர்ந்து கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர்கள் வலியின் காரணமாகத் தான் அழுகிறாள் என்று அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அப்சீனுக்கு புது விதமான தசைக்குறைபாடு நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை நகரத்தில் இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்துப் பார்ப்பதே பலனளிக்கக் கூடும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அப்சீனை நகரத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்வதற்கு பெற்றோரிடம் உரிய பணம் இல்லாத காரணத்தினால், அவர்கள் இதை பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுள்ளனர். அதன் விளைவாக இந்த பிரச்சனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 9 வயதாகும் அவளுக்கு, அவள் வளர, வளர அவளது தசைக்குறைபாட்டு நோயும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக தினமும் தாங்கவியலாத கழுத்து வலியால் நொந்து போய் அவதிப்படுகிறாள் அப்சீன்.

இது குறித்து அப்சீனின் பெற்றோர் கூறுகையில், தங்களது 9 வயது மகளுக்கு வந்திருக்கும் இந்த வித்யாசமான தசைக்குறைபாட்டு பாதிப்பை போக்கி அவளை இயல்பான பிற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாடித் திரிய வைக்கும் ஆர்வமும், ஆதங்கமும் அப்சீனின் அதிகமாக இருந்தும் கூட வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் எங்களால் என்ன பண்ண முடியும் என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்