ஆஃப்கன் தொலைக்காட்சி நிலையத்தின் மீது தாக்குதல் 20 பேர் உயிரிழப்பு

Report Print Thayalan Thayalan in ஏனைய நாடுகள்
47Shares

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்தின் மீது இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

மேற்படி தொலைக்காட்சி நிலையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. பிரதான தொலைக்காட்சி நிலையத்தை மூவர் கொண்ட பயங்கரவாதக் குழுவினர் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து தாக்குதலில் உயிரிழந்வர்கள் பற்றிய தகவல் இதுவரையில் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

3 பேர் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது, தாக்குதல்தாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சின் பேச்சாளர் நஜீப் டனிஸ் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில் இத்தாக்குலில் உயிரிழந்த ஏனையோர் பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.

தாக்குதல் முடிவிற்கு வந்தது

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்தின் மீது இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் விஷேட படைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு மணி நேர சமருக்குப் பின்னர் தொலைக் காட்சி நிலையம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்த ஐ.எஸ் அமைப்பினர், இத்தாக்குதல் மூலம் 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தமையானது, அவர்களின் பிரச்சாரச் செய்தியே தவிர அதில் உண்மை இல்லை எனத் தெரிகிறது.

தாக்குதலுக்கு இலக்கான Shamshad தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தியில், இத்தாக்குதலில் சக ஊழியர்கள் காயங்களுக்கு மட்டுமே இலக்காகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்திருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன,

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்