பறக்கும் விமானத்தில் கணவனுடன் கடும் சண்டைபோட்ட மனைவி: பாதி வழியில் விமானத்தை திருப்பி விட்ட விமானி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1458Shares

கட்டார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்றில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் விமானி பாதியிலேயே விமானத்தை திருப்பி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டாரின் தோஹா செல்லும் விமானத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் பயணம் செய்த ஈரானிய குடும்பம் ஒன்று நடுவானில் கடும் ரகளையில் ஈடுபட்டதால் சமாளிக்க முடியாத விமானி குறித்த விமானத்தை சென்னை நோக்கி திருப்பி விட்டுள்ளார்.

சம்பவத்தின்போது ரகளையில் ஈடுபட்ட ஈரானிய பெண்மணி தமது கணவரின் மொபைல் போனை தூக்கத்தில் இருந்த அவரது விரல் ரேகையை பயன்படுத்தி திறந்துள்ளார்.

மொபைலில் இருந்த தகவல்கள் அந்த பெண்மணியை கடும் மன உளைச்சலுக்கு தள்ளியது. தமது கணவர் தம்மை இன்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளது குறித்த பெண்மணிக்கு தெரிய வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பறக்கும் விமானத்தில் தமது கணவருடன் சண்டையிட்டுள்ளார். மட்டுமின்றி மதுவும் அருந்தியிருந்த அவரை அமைதிப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் வீணானது.

இதனையடுத்து உடனடியாக விமானத்தை சென்னைக்கு திருப்பி விட்டுள்ளார் விமானி. பின்னர் சென்னையில் இருந்து மலேசிய விமானத்தில் குறித்த ஈரானிய குடும்பத்தை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்