காப்பாளரை கடித்துக் குதறிய புலி: ரஷ்யாவில் பயங்கரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் மிருககாட்சிசாலை ஒன்றில் உணவு வழங்கிய காப்பாளர் மீது புலி பாய்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஷ்யாவின் Kaliningrad மிருககாட்சிசாலையில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது ஏராளமான பார்வையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட இந்த சைபீரியன் புலிக்கு பெண் காப்பாளர் உணவு வழங்குவதை வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.

அப்போது திடீரென்று உணவு வழங்கிய பெண் காப்பாளர் மீது பாய்ந்த புலியானது அவரை இழுத்து மறைவிடம் நோக்கி நகர்ந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் கூச்சல் எழுப்பி புலியின் பிடியில் இருந்து அந்த பெண் காப்பாளரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர்.

சிலர் தங்கள் அருகாமையில் இருந்த தேநீர் விடுதியின் நாற்காலிகள் உள்ளிட்டவையை தூக்கி புலி மீது வீசியுள்ளனர்.

இதனையடுத்து மிரண்ட புலி அந்த காப்பாளரை விட்டு நகர்ந்துள்ளது. உடனடியாக மிருககாட்சிசாலையின் எஞ்சிய காப்பாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான பெண் காப்பாளரை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

புலி ஆக்ரோஷ்மாக தாக்கியதில் அந்த பெண் காப்பாளர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers