சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: எகிப்தில் இவை எல்லாம் மீறினால் தண்டனை உறுதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எகிப்தில் தடை செய்யப்பட்ட வலி நிவாரி வைத்திருந்ததாக கூறி பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பயணிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய சுற்றுலா பயணி Laura Plummer என்பவர் 290 Tramadol tablets, plus some Naproxen ஆகிய வலி நிவாரிகளை கைவசம் வைத்திருந்ததாக கூறி Hurghada சர்வதேச விமான நிலையத்தில் ஆயுத போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் மிக பிரபலமான சுற்றுலா தலமான எகிப்தில் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.

பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகள் மிக குறைவான எண்ணிக்கையில் எகிப்தில் எடுத்துச் செல்லலாம், ஆனால் தன் எண்ணிக்கை அளவு அதிகமாக இருந்தால் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.

பிரித்தானியாவில் பொதுவாக புழக்கத்தில் இருக்கும் பல மாத்திரைகளும் எகிப்தில் தடை செய்யப்பட்டவையாகும். அதை நமது தேவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனில் எகிப்தின் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

ஒரே பாலின உறவு எகிப்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுவெளியில் ஒரே பாலினர் அன்பை வெளிப்படுத்த தடை உள்ளது.

இஸ்லாமிய நாடு என்பதால் ஆடை கட்டுப்பாடு முக்கியமாக கருதப்படுகிறது. பெண்கள் கால்கள் தெரிய ஆடை உடுத்த தடை உள்ளது. ஆண்கள் மார்பு தெரிய நடமாடவும் தடை உள்ளது.

உரிய அனுமதி இல்லாத பகுதியில் மது அருந்துவது குற்றமாகும், அது சட்ட சிக்கலை உருவாக்கும்.

ராணுவ முகாம்களின் அருகாமையில் அல்லது ராணுவ முகாம்கள் மீது புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers