கனடா மக்களுக்கு எதிராக நடவடிக்கை: ரஷ்யா அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கனடா குடிமக்கள் பலர் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஊழலுக்கு எதிராக போராடி வந்த வழக்கறிஞர் செர்கி மேக்னிட்ஸ்கி பெருமளவு வரி ஏய்ப்பு செய்ததாக கூறி பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் கடந்த 2009-ம் ஆண்டு சிறையில் உயிரிழந்தார். இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ரஷ்ய அதிகாரிகள் 30 பேர் கனடாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, “கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக கனடா குடிமக்கள் பலர் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். தடை விதிப்பதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தைக்கு கனடா முன்வரவேண்டும்” என்றார்.

கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் ரஷ்யா, வெனிசுலா மற்றும் தெற்கு சுடான் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்