ஜனாதிபதியை தரக்குறைவாக விமர்சித்த பத்திரிகையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஜிம்பாவே ஜனாதிபதி Robert Mugabe தரக்குறைவாக விமர்சித்த அமெரிக்க பெண் பத்திகையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10 ஆம் திகதி Martha O'Donovan என்ற அமெரிக்க பெண் பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு, அதில் அவரது தொடை பகுதில் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, ஜனாதிபதி ஒரு சுயநலவாதி என்றும் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதருக்கு பின்னால் நாம் நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியை தரக்குறைவாக விமர்சித்த காரணத்தால் இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு ஜிம்பாவே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இவர் மீதான குற்றம் தற்போது நிரூபிக்கப்பட்ட காரணத்தால், இவருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்