விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை..இடைமறித்து போட்டுத் தள்ளிய சவுதி அரேபியா

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை தாக்குவதற்காக ஏவப்பட்ட ஏவுகணையை வழிமறித்து அழித்துவிட்டதாக சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டிலுள்ள ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது பாலிஸ்டிக் வகை ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடந்தியதாக செய்திகள் வெளியான.

இந்நிலையில் ரியாத்தில் உள்ள கிங் காலித் பன்னாட்டு விமான நிலையத்தை நோக்கி புர்கான் 2H ஏவுகணையை ஏமன் நாட்டில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவியதாகவும், ஆனால் அது ரியாத்தை நெருங்குவதற்கு முன்பாகவே இடைமறித்து தாக்கி அழித்து விட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இதனால் விமானங்களுக்கும், மற்ற சேவைகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏமன் நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ படைகளுக்கும் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்