ஆபாச படம் பார்க்கபோகிறீர்களா? தென் கொரியாவின் அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தென்கொரிய மக்களிடையே ஆபாச படம் பார்ப்பது அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்காக அந்நாட்டு காவல்துறை புது யுக்தியை கையாண்டுள்ளது.

பெண்கள் நடந்து செல்கையில் ஆடை மட்டத்தின் கீழே கமெரா வைத்து ஆபாச படம் எடுக்கும் பழக்கம் தென்கொரியாவில் அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் ரகசிய கமெராக்களால் நடக்கும் பாலியல் குற்றங்கள் ஆயிரக்கணக்கானவை.

இதனால் ஆபாச காணொளியை இணையத்தில் தேடுபவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம், ஏனெனில் பேய் போன்று ஒரு உருவம் தோன்றி, அவரை தற்கொலைக்கு தூண்டுவது நீங்களாக கூட இருக்கலாம்.

இந்த தளத்தை காவல்துறை கண்காணிக்கிறது என்று எச்சரிக்கிறது. இவை தென்கொரிய காவல்துறையால் தயாரிக்கப்பட்ட போலியான காணொளிகள் . இவை ஆபாசப்பட இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.

எதிர்பாராத பயன்பாட்டாளர்களால் இவை பல்லாயிரம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.இந்த அதிர்ச்சி வீடியோ ஆபாச படம் பார்ப்பவர்களை தடுக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ரகசிய கமெரா மூலம் ஆபாச படம் எடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்