வடகொரியா மீதான தாக்குதல் பேரழிவை உண்டாக்கும்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்க நேரிட்டால் அது இரு நாட்டுக்கும் பேரழிவை உண்டாக்கும் என அந்த நாட்டில் இருந்து வெளியேறிய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவில் இருந்து வெளியேறிய முன்னாள் அரசு அதிகாரி Thae என்பவர் குறித்த எச்சரிக்கையை அமெரிக்காவுக்கு விடுத்துள்ளார்.

வடகொரிய ராணுவம் கொடூர குணம் கொண்டது எனக் கூறும் அவர், கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பெயர்போனவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கு எச்சரிக்கை தரும்வகையில் சின்னதாய் தாக்குதல் தொடுத்தாலும் கூட அந்த நாடு முழுவீச்சிலான போரை முன்னெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவின் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல் வட்டத்திற்குள் சுமார் 10 லட்சம் தென் கொரிய மக்கள் குடியிருந்து வருவதாகவும்,

அமெரிக்கா வடகொரியாவை தாக்கினால் அதன் எதிர்வினை எல்லையோரம் இருக்கும் அப்பாவி தென் கொரிய மக்கள் மீதாகவே இருக்கும் எனவும் Thae எச்சரித்துள்ளார்.

பல முறை சர்வதேச சமூகம் எச்சரிக்கை விடுத்தும், கண்டுகொள்ளாத வடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஆசிய நட்பு நாடுகள் மீதும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்