கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் பொதுமக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் மெக்சிகோவிற்கு கீழே உள்ள நாடு கவுதமாலா. இங்கு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கவுதமாலா நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. கடந்த செப்டம்பரில் மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 361 பேர் கொல்லப்பட்டனர். 6,000 பேர் காயமடைந்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்