கொல்லப்பட்ட கைதிகளின் தலைகளை கால்பந்தாக விளையாடும் சிறுவர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கைதிகளின் தலைகளை சிறுவர்கள் கால்பந்தாக விளையாடியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்ள யாசிதி இனத்தவரை குறிவைத்து அழித்து வந்தது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு.

யாசிதி இளம்பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மட்டுமின்றி யாசிதி குடியிருப்புகளையும் சூறையாடியதுடன் தீக்கிரையாக்கியும் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட யாசிதி சிறுவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பிரபல ஊடகம் ஒன்றிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்குவது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

பெரும்பாலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். அப்போது அந்த தலைகளை சிறுவர்களுக்கு கால்பந்தாக விளையாடத் தருவதாக யாசிதி சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் சண்டைக்கு செல்லும் பகுதிகளில் யாசிதி சிறுவர்களையே முன்வரிசையில் நிறுத்துவதாகவும், அதில் கொல்லப்படுவதால் நேரிடையாக கடவுளிடம் செல்லலாம் எனவும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டாயப்படுத்தியதாகவும், 3 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் குடும்பத்துடன் இணைந்த யாசிதி சிறுவன் தெரிவித்துள்ளான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்