வட கொரியாவை பற்றிய சில விசித்திரமான தகவல்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அணு ஆயுத சோதனை மூலம் தனது நாட்டு இராணுவத்தை பலப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது வடகொரியா.

வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி, பொருளாதார பிரச்சனை, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை என்று வடகொரியாவை பற்றி பல்வேறு தகவல்களை கேள்விபட்டிருந்தாலும் அந்நாடு பற்றியும் அந்நாட்டு மக்கள் பற்றியும் சில விசித்திரமான தகவல்களும் உள்ளன.

 • 1948-ம் ஆண்டு முதல் தற்போது வரை வடகொரியாவில் குடும்ப ஆட்சிதான் நிலவி வருகிறது. 1948 ஆம் ஆண்டில் வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் குடும்ப வம்சத்தினர்தான் அன்று முதல் இன்றுவரை அந்நாட்டை ஆட்சி புரிகின்றனர்.
 • இரண்டரைக் கோடி மக்கள்தொகை கொண்ட வடகொரியாவில் பத்தில் ஒருவரிடமே செல்போன் இருக்கிறது.
 • ‘Koriolink’ என்ற ஒரே நெட்வொர்க்கை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எகிப்திய தொலைத்தொடர்பு நிறுவனமான Orascom உடன் கூட்டணியாக நிறுவப்பட்ட கொரியோலிங்தான் வடகொரிய மக்களுக்கு பல ஆண்டுகளாக ஒரே ‘சாய்ஸ்’. பின்னர், 2015-ம் ஆண்டில் ‘Bialல்’ என்ற போட்டி நெட்வொர்க் ஒன்றை வட கொரியா அமைத்தது.
 • வடகொரியாவின் பெரும்பான்மை மக்கள் அந்த நாட்டுக்குள் மட்டுமே செயல்படும் ‘தனி இணையத்துக்கு’ மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான ‘Intranet’ போன்றதாகும்.
 • வடகொரிய எல்லையைக் கடந்து, தென்கொரியாவுக்கு வரும் அகதிகளின் உயரத்தை சியோலில் உள்ள சுங்கியூன்குவான் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் சுவகிண்டிக் ஆய்வு செய்தார்.
 • அப்போது, தென்கொரிய ஆண்களைவிட, வடகொரிய ஆண்கள் சராசரியாக 38 செ.மீ. உயரம் குறைவாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
 • இந்த உயரக்குறைவுக்கு மரபியலை காரணமாக கூறமுடியாது. ஏனெனில் இரு நாட்டு மக்களும் ஒரே மரபைச் சேர்ந்தவர்கள். உணவுப் பற்றாக்குறையே வடகொரியர்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.
 • வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வெளியிடப்படும் புகைப்படங்களில், பரந்த, அழகிய நெடுஞ்சாலைகளையும், போக்கு வரத்து நெரிசல் இல்லாத சாலைகளையும் காணமுடியும்.
 • ஆனால், அந்த தலைநகரத்தினை விட வடகொரியாவில் உள்ள மற்ற இடங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும்.
 • 2006-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி வடகொரியாவில் சுமார் 25 ஆயிரத்து 554 கி.மீ. சாலைகள் உள்ளன. ஆனால் அதில் வெறும் 3 சதவீதம் மட்டுமே, அதாவது சுமார் 724 கி.மீ. நீளச் சாலைகள்தான் முறையாகப் போடப்பட்டவை.
 • வடகொரிய மக்களில் ஆயிரத்துக்கு 11 பேர் மட்டுமே கார் வைத்திருக்கிறார்கள்.
 • வடகொரியாவின் பொருளாதாரம் பெரிதும் நிலக்கரி ஏற்று மதியை நம்பியுள்ளது.
 • வடகொரியாவின் முக்கிய நிலக்கரி ஏற்றுமதி நாடுகளில் ஒன்று சீனா. அந்நாடும், கடந்த பிப்ரவரியில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதித்தது.
 • அந்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை ராணுவத்துக்கு ஒதுக்குவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஏறக்குறைய ஆண்கள் அனைவரும் ஏதோ ஒரு ராணுவப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
 • 1990களின் பிற்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களால் வடகொரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாகக் குறைந்தது. இந்தக் காரணியை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும்கூட, ஆயுள் விஷயத்தில் வடகொரியா சுமார் 12 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்