சவுதி அரசு வெளியிட்ட நாவல்: பாலியல் உணர்வை தூண்டுவதாக விமர்சனம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியா அரசு வெளியிட்ட நாவல் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.

சுவுதி அரேபிய அரசின் கலாச்சாரத்துறை சார்பில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் பத்ரியாத் எல் பிஷ்ர்-ன் Thursday's Visters என்ற நாவல் வெளியிடப்பட்டது.

இந்த நாவலில், சவுதியில் ஒரு பெண்ணின் தினசரி வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமாக உள்ளது. இதை வாங்கிப்படித்த சிலர் குறித்த நாவலின் சில பகுதிகள் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக உள்ளது என்று விமர்சித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஒருவர் இந்த நாவலை எப்படி ஒரு கடையில் குழந்தைகள் புத்தகங்கள் பகுதியில் வைத்திருக்கிறார்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது போன்று தொடர்ந்து இந்த புத்தகத்திற்கு விமர்சனங்கள் எழுந்து வருவதால், இந்த புத்தகத்தை வெளியிட்ட சவுதி கலாச்சரத்துறையே அதனை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும், குறித்த புத்தகம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதால், அதை பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நாவலை எழுதிய பத்ரியாத் இந்த விமர்சனத்திற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்