12 ஆண்டுகளாக முதலிடம்: உலகில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியீடு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சொத்துமதிப்பு, சமூகத்தில் மதிப்பு, சார்ந்திருக்கும் தொழிலில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம், சாதனை, சேவை, அரசியல் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்தி சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தாண்டும் உலகின் சக்திவாய்ந்த பெண்மனியாக ஜெர்மன் பிரதம் ஏஞ்செலா மெர்கல் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து 7-வது முறையாகவும் மொத்தம் 12 முறையாகவும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க்கும், ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டிற்கான இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த, ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32-வது இடத்திலும், ஹெச்சிஎல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் 71-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...