டிரம்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்த தென் கொரிய மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக தென் கொரியா செல்லவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சியோலில் போராட்டத்தில் குதித்த மாணவர்களை பொலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.

சில மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

பல மாணவர்கள் கொரியா மற்றும் ஆங்கில மொழிகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில மாணவர்கள் ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக குரல் எழுப்பி முழக்கமிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தென் கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை சந்திக்கும் பொருட்டு பயண திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டு வரும் நிலையில், டிரம்பின் இந்த பயணம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என தென் கொரிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பொதுவாகவே ஆத்திரமூட்டும் வகையில் பேசிவரும் டிரம்பினால் தென் கொரிய பயணமானது உலக அளவில் மோதலுக்கு வித்திடக் கூடும் எனவும் தென் கொரிய மாணவர்கள் அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...