நடு வானத்தில் இருந்து தடுமாறி விழுந்த விமானம்: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அயர்லாந்தில் இருந்து ஸ்பெயின் சென்ற விமானம் ஒன்று நடு வானத்தில் திடீர் கோளாறு காரணமாக நிமிடத்திற்கு 4000 அடி என குத்திட்டு கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் டப்லினில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு பயணமான சுற்றுலா விமானத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து பிரான்சின் போர்டியாக்ஸ் விமான நிலையத்தில் குறித்த விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானங்களின் தடம் தொடர்பில் நேரலை செய்யும் இணையதளம் ஒன்று குறித்த சம்பவத்தை முதன் முறையாக பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் உள்ளூர் நேரப்படி காலை 11.35 மணியளவில் போர்டியாக்ஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து சில மணி நேரத்தில் மாட்ரிட் புறப்பட்டு சென்றதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...