வடகொரியா அருகே வட்டமிட்ட அமெரிக்க போர் விமானங்கள்: கிம் ஜாங் உன் கடும் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியா அருகே அமெரிக்க போர் விமானங்கள் வட்டமிட்ட நிலையில், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரிய கடற்பகுதி அருகை சில மைல்கள் தொலைவில் அமெரிக்க போர் விமானங்கள் பல முறை வட்டமிட்டுள்ளன.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த வடகொரியா, அணு ஆயுத போரை அமெரிக்கா வலுக்கட்டாயமாக திணிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

மட்டுமின்றி வடகொரியாவை அச்சுறுத்தியோ மிரட்டியோ பணிய வைக்க முடியாது எனவும், எவ்வித சாவலையும் எதிர்கொள்ள வடகொரியா தயார் நிலையில் உள்ளது எனவும் அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய நாடுகள் சிலவற்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதன் ஒருபகுதியாக தென் கொரியாவிலும் அவர் செல்ல உள்ளார். மட்டுமின்றி வடகொரியா அடுத்த அணு ஆயுத ஏவுகணை ஒன்றை சோதனைக்கு முயற்சிப்பதாகவும் உளவு அதிகாரிகளால் தகவல் வெளியானது.

இந்த நிலையிலேயே வடகொரியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம் எனவும் சவாலை எதிர்கொள்ள தயார் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...