திருமண உடையில் அடக்கம் செய்யப்பட்ட மொடல் சிறுமி: காரணம் இதுதான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் அதிக உடல் உழைப்பு காரணமாக மரணமடைந்த மொடல் சிறுமியை திருமண உடையில் அடக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் பிரபல மொடல் சிறுமிகளில் ஒருவரான Vlada Dzyuba(14) அதிக உடல் உழைப்பு மற்றும் சோர்வு காரணமாக பணியின்போது குழைந்து விழுந்து மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவர் திருமண பந்தத்தில் ஏற்படாமல் மரணமடைந்துள்ளதால் அவரது இறுதிச்சடங்கின்போது திருமண உடையில் அவரை உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

குறித்த மொடல் சிறுமிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் 3 மாதங்கள் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் நாள் ஒன்றுக்கு வெறும் 6.30 பவுண்ட் மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளது.

தற்போது வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் அவரது திடீர் மறைவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ரஷ்ய நாட்டவரான Vlada Dzyuba சீனாவில் ஒப்ப்ந்த அடிப்படையில் மொடலாக பணி செய்து வந்தார்.

சிறுமி கடுமையாக நோய்வாய்ப்பட்டபோதும் அவரது தாயாரால் கூடவே இருந்து சிறுமியை கவனிக்க முடியவில்லை.

தொலைபேசியில் பேச்சிக்கொள்ளும் இருவரும் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுமாறு பல முறை தாயாரால் கேட்டுக்கொள்ளப்பட்டும், வேலைப் பளு காரணமாக மொடல் சிறுமியால் அதை காப்பாற்ற முடியாமல் போனது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...