டிசம்பர் 31க்குள் மீண்டும் சுனாமி: தீயாய் பரவி வரும் தகவல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

டிசம்பர் 31க்குள் இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி தமிழகம் மற்றும் கேரளாவில் அழிவை ஏற்படுத்த உள்ளதாக கேரளாவை சேர்ந்த பாபு கலயில் எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் பாபு கலயில். இவர் தனக்குரிய பிரத்யேக சக்தியின் மூலம் உலகில் நடக்கும் இயற்கை பேரிடர்கள், மாற்றங்களை முன்கூட்டியே அறிவதாக கூறுகிறார்.

2004ல் தாய்லாந்து, இந்தியா உள்ளிட்டு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தார்.

எனினும் அதற்கு முன் சுனாமி பாதிப்பு பற்றிய போதிய புரிதல் இல்லாததால் இவரின் எச்சரிக்கையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

சுனாமி மட்டுமின்றி பல இடங்களில் நிலநடுக்கம் பற்றியும், முன்கூட்டியே தகவல் அளித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் பி.கே.ரிசர்ச் அசாசியேஷனை நடத்தி வரும் கலயில், பூமியில் நடக்கும் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூர்ந்து கவனிக்கிறார்.

தனக்கு உள்ள “எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்” எனப்படும் சிறப்பு சக்தி மூலம் வருங்காலத்தில் நடக்கவுள்ள இயற்கை சீற்றங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கிறார்.

அந்த வகையில் டிசம்பர் 31க்குள் இந்திய பெருங்கடலில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்படப் போவதாக எச்சரித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி அலைகள் எழுந்து தமிழகம் மற்றும் கேரளாவில் கடலோர மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கலயில் கூறியுள்ளார்.

கடலில் ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால் இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உருவாக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

டிசம்பர் 31க்குள் எந்தவொரு நாளிலும் இந்த இயற்கை சீற்றம் நடக்கலாம் என்பதால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையும் இருக்கும்படி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 20ல் கடிதம் எழுதியுள்ளார்.

- Dina Malar

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...