17 பேரை கொன்ற மணப்பெண்: திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் பாலில் விஷம் கலந்து கொடுத்து 17 பேரை கொலை செய்த புதுப்பெண், தான் காதலுக்காக எதுவும் செய்வேன் என பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பஞ்சாப்பில் வசித்து வந்த ஆசியா பீபி (21) என்ற பெண்ணுக்கும், அஜ்மல் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆசியா வேறு ஒரு நபரை காதலித்து வந்த போதிலும், அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஜ்மலுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமண வாழ்க்கை பிடிக்காத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது கணவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்த பாலினை கணவர் குடிக்காததால், அதனை அவரது மாமியார் லஸ்ஸி தயார் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு குடிக்க கொடுத்துள்ளார்.

இதனை 27 பேர் குடித்ததில், 13 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆசியா கைது செய்யப்பட்டார், அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு திருமணம் பிடிக்கவில்லையென்று பெற்றோரிடம் தெரிவித்தேன், எனக்கு எனது காதல் தான் முக்கியம்.

இதனால் காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...