நாடு கடத்தப்படவிருந்த அகதி குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவில் நாடு கடத்தப்படவிருந்த சிரிய அகதி ஒருவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பலரும் சட்டவிரோதமாக லொறிகளில் பதுங்கியும், கடல்மார்க்கமாகவும் எல்லையை கடக்கின்றனர்.

இந்நிலையில் சிரிய அகதியான Mohammed Mirzo(வயது 20) என்பவர் பல்கேரியாவிலிருந்து லொறி மூலம் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்.

இங்கே அவரை விசாரணை செய்த அதிகாரிகள் நாடு கடத்துவதற்காக Campsfield Immigration Removal Centre-ல் தடுத்து வைத்திருந்தனர்.

ஆனால் அவரது குடும்பம் Cardiff நகரில் வசித்து வருகின்றனர், இதனைதொடர்ந்து 8000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு மனுத்தாக்கல் செய்தனர், சில எம்பிக்களும் பரிந்துரை செய்தனர்.

இதனைதொடர்ந்து தீவிர விசாரணைக்கு பின்னர் Mohammed Mirzo-வை அதிகாரிகள் விடுவித்தனர்.

மீண்டும் குடும்பத்துடன் இணைந்த மகிழ்ச்சியில் Mohammed Mirzo கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.

அவர் கூறுகையில், இந்த நிமிடம் சந்தோஷத்தை உணர்கிறேன், எனக்காக கையெழுத்திட்டு மனுத்தாக்கல் செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers