மனித கேடயமாக 400 அப்பாவி மக்கள்: இறுதிகட்ட போருக்கு தயாராகும் ஐ.எஸ்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவினருக்கு எதிரான போர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 400 அப்பாவி பொதுமக்களை மனி கேடயமாக அவர்கள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான போர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள அனைத்து பகுதிகளும் மீட்கப்படும் என்ற நிலையில், கூட்டுப்படையினருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கோட்டையாக விளங்கும் சிரியாவின் ரக்கா பகுதியில் இருந்து அவர்கள் காயமின்றி தப்பும் பொருட்டு, 400 அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிபந்தனையற்ற சரணடைதல் கெடு விதித்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் 100கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரணடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ரக்கா நகரில் இருந்து துடைத்து நீக்கப்படுவர் என அமெரிக்க கூட்டுப்படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நாளை காலை தொடங்கி அதற்கான பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரக்கா நகரை கைப்பற்றுவது என்பது ஐ.எஸ் படைகளுக்கு எதிராக துவங்கிய இந்த போரின் முக்கிய கட்டம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் ஐ.எஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த மோசூல் நகரம் கூட்டுப்படைகளின் வசமானது. தற்போது ரக்கா நகரத்தை மீட்கும் பணி மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் சில மணி நேரத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வசம் இருந்த ரக்கா மீட்கப்பட்டது என்ற தகவல் வெளியாகும் எனவும் ராணுவத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers