ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்திய இந்தியர்கள் நிலை: ஈராக் பிரதமர் கைவிரிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மாயமான இந்தியர்கள் நிலை குறித்து போதிய தகவல் எதுவும் இல்லை என அந்நாட்டு பிரதமர் அல் அபாதி கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஈராக்கில் கட்டுமான பணிக்கு வேலைக்கு சென்றனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் துவங்கிய போது, மொசூல் நகரில் 39 இந்தியர்கள் மாயமானார்கள். அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசி, கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

39 இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் ஈராக் ராணுவம் மொசூல் நகரை கைப்பற்றியது.

இந்நிலையில், ஈராக் பிரதமர் அல் அபாதி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மாயமான 39 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் இதுவரை இல்லை.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் எந்த தகவலும் தர முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை எடுத்து செயல்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், ஈராக் பிரதமரின் இந்த கருத்து, மாயமான இந்தியர்களின் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்