மிகவும் கொடூரமான தாக்குதலை முன்னெடுப்போம்: அமெரிக்காவை மீண்டும் எச்சரிக்கும் வடகொரியா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மேலதிக பொருளாதார தடை விதிப்பது அமெரிக்காவின் கொடூரமான முடிவுக்கு வழி வகுக்கும் என வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.

உலகம் இதுவரை கண்டிராத கொடூரமான தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயங்காது என அந்த நாடு எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் இந்த எச்சரிக்கையானது ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை செய்தும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொள்வதில் இருந்து பின்வாங்கவில்லை.

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் அதன் ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள வடகொரியா அணுஆயுத போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த வெள்ளியன்று ஜப்பான் மீது தனது ஏவுகணையை பறக்க விட்டு வடகொரியா மீண்டும் போர் சூழலை அதிகரிக்கச் செய்துள்ளது. மட்டுமின்றி அடுத்த 24 மணி நேரத்தில் வடகொரியா வெளியிட்டுள்ள கருத்தானது உலக அரங்கில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜப்பானை மூழ்கடிப்போம் அமெரிக்காவை தீக்கிரையாக்குவோம் என வடகொரியா அச்சுறுத்தல் வெளியிட்டது.

எத்தனை பொருளாதார தடை வந்தாலும் வடகொரியாவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் வரப்போவதில்லை என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில்

ஜெனீவாவில் பேசிய அமெரிக்க தூதர் ராபர்ட் வூட், உலக நாடுகள் மேலதிக அழுத்தம் தந்து வடகொரியாவை பணிய வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்