விபத்துக்குள்ளாகி நொறுங்கிய ரஷ்யா போர் விமானம்...திறமையாக செயல்பட்ட விமானிகள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Voronezh பகுதயில் உள்ள the Borisoglebsk விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. YAK-130 போர் விமானமே பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் புறபட்ட சில நிமிடங்களில் செயலிழந்ததை அறிந்த விமானிகள், விமானத்திலிருந்து குதிப்பதற்கு முன் அருகிலுள்ள குடியிருப்பு கட்டடங்கள் மேல் விமானம் மோதாமல் இருக்க அதன் திசைசை மாற்றியமைத்துள்ளனர்.

இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து குதித்து பத்திரமாக தரையிறங்கிய விமானிகள் உடனே கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்த தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் விமானிகளுக்கு உதவ சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், விபத்திற்கான காரணம் குறித்து ரஷ்யா விமான பாதுகாப்பு அணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இயந்திர கோளாறே விபத்திற்கான காரணம் என தகவல்கள் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் தற்போது வரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்